என்னுள் தொலைந்துபோன
பாதையில் நீயும் நானும்
வண்ணத்துப்பூச்சியின் நிறங்களாய்
சாத்தப்படும் கதவுகளுக்கு அப்பால்
எப்போதும் மர்மப் புன்னகை ஒலியை
சலிக்காமல் உதிர்க்கிறாய்
நானோ கதவுகள் பொய்யென்று
நானோ கதவுகள் பொய்யென்று
மௌனமாய் கடக்கிறேன்
நீயோ புன்னகை ஒலியை
நிறங்களாய் மாற்றி கதவுகளை
அலங்கரிக்கிறாய்
நானோ நிறங்களும் பொய்யென்று
நானோ நிறங்களும் பொய்யென்று
கதவுகளையும் கடக்கிறேன்
நீயோ நிறங்களுக்கு வாசனை உண்டென
எனது நாசித்துவாரத்தை கடக்கிறாய்
நானோ மூச்சும் பொய்யென்று
நானோ மூச்சும் பொய்யென்று
நிறங்களை மறுக்கிறேன்
இறுதியில் எதுவும் இல்லையென
நீயும் கடக்கிறாய்
நானோ கடத்தலே பொய்யென
நானோ கடத்தலே பொய்யென
அதையும் கடக்கிறேன்
5 comments:
mmm....
simply superb
கவிதை நல்லா இருக்கு.. ஆனா பிழைகள் நிறைய இருக்கு .. (வேர்ட் வெரிஃபிகேசன் எடுத்துடுங்க ப்ளீஸ்)
தவறுகளை திருத்தி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி உங்களின் அழமான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் ..
நன்றி முத்துலெட்சுமி
நன்றி மயாதி
நல்ல கவிதை !
Post a Comment