சூழலின் வெளியில் தொலைத்த
எனது உணர்வலை
எப்போதாவது என் சுவாசக்கிற்றை
கடந்து செல்கையில் பரவும் பரவசம்
வார்த்தைக்குள் மட்டும் வருவதேயில்லை
நாட்பட்ட எனது காயத்தை
குருதிகலந்த மருந்துகள் கூட
சீண்ட மறுக்கின்றன
என் புகைத்தலின் ஒரு பொழுதில்
கடந்த என் நண்பனின் முகத்தில்
என் காயத்தின் சீழ் வடிவதை
சிரித்து மறைக்க முயன்றதை
நானும் சிரித்து மறைத்தேன்
பரஸ்பரம் இரத்தக்கரை படிந்த
பற்களை பரிமாறியபடி
மதுவிடுதியின் இரைச்சலை
அதிகப்படுத்தி வெளியில் பார்க்கையில்
அனைவரின் முகத்திலும்
எனது காயத்தின் குருரம்
1 comments:
கவிதையை படித்தவுடன் புல்லரித்துவிட்டது நண்பா,
ஆனா ஒரு எழவும் புரியல..என்ன மசுருக்கு இந்த மாதிரி கவிதை எழுதி உயிரை வாங்குகிறீர்கள்..
ஓசியில் ஒரு பிளாக் கிடைத்தால் ஓ....ஊரில் இருக்கிறவன் உசிரை வாங்குவதா?
Post a Comment