Thursday, June 4, 2009

மௌனம் சூழ்ந்த உறவு (போட்டிச்சிறுகதை)

இன்றோடு அவனிடம் பேசி இரண்டு நாளாவது இருக்கும். அலைபேசி விடாமல் கதறிக் கொண்டே இருந்த்து. எடுப்பதா வேண்டாமா? என்ற யோசனைக்கு நடுவில் அலைபேசி கதறி அணைந்து அவ்விடமெங்கும் நிசப்தம் சூழ்ந்தது.மின் விசிறியை பார்த்தபடியே அவனின் நினைவுகள் என்னைச் சுழன்றபடியே இருந்த்து. முன்று மாததிற்கு முன்பு ஒரு நோயாளியாக எனக்கு அறிமுகமானான். இயல்பாய் பல நாள் பழகிய நட்புணர்வுடனான அவனது பேச்சு இந்த் துறைக்கு புதிது என்பாதல் எனக்கு ஆச்சிரியத்தை அளித்து.அவனது பேச்சும் அவனது நடத்தையும் விசித்திரமாய் வசிகரிக்ககூடியதாய் இருந்த்து..

அவனிடம் அவனது மருத்துவ சான்றிதலை அளித்து உங்களுக்கு ஹை.ஐ.வி தொற்று இல்லை என்று சொன்னேன். வழக்கமான இந்த மாதிரியான நோயாளிகளிடம் காணப்படும் விடுபட்ட உண்ர்வுடன் கூடிய மின்னும் கண்களிடம் வெளிப்படும் மகிழ்ச்சியும் நன்றி நவிழ்தல்களுமாய் அவனும் விடைபெற்றான். அன்று மாலையே மறுபடியும் அலைபேசியில் அழைத்தான்.

சிலரை நாம் சந்திக்கும் அந்த கணத்திலே ஏற்படும் நட்புணர்வு அவனிடம் இயல்பாய் வெளிபட்டது. அலைபேசி வழியாய் பேசிக்கொண்டோம் கிட்டத்தட்ட தினமும் பேசிக்கொண்டோம். குடும்பம், நண்பர்கள், திரைப்படம். கிசுகிசு. இலக்கியம் என அவன் சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டே இருந்தான். பல முறை முயற்சித்தும் இருவருக்குமான வேலை நேர அவலத்தால் சந்திக்கவே முடியவில்லை.


இந்த வார இறுதியில் எப்படியும் சந்திப்பது என்ற முடிவில் இருவரும் ஒரு ஞாயிறு ப‌க‌ல் உண‌வு வேலையில் ஒரு உண‌வு விடுதியில் ச‌ந்தித்துக்கொண்டோம். எங்களது சுவாரஸ்யமான பேச்சுக்கு நடுவில் எனது அலைபேசி கதறியது அம்மாட்ட இருந்து போன் என்று சொல்லியபடி அம்மாவிடம் பேசித்துவங்கினேன் வழக்கமான அம்மாவாய் அவளும் சராசரி மேன்சன் வாசியாக நானும் பேசித்தீர்த்தோம். என்னைப்
பார்த்து கொண்டே இருந்த அவனிடன் ’என்னடா அச்சு உனக்கு முறைக்கிற’ என்ற படி எனக்கான இருக்கையில் அமர்ந்தேன்.. அவனும் நீண்ட யோசனைக்குபின் அவன் ’அம்மாண்னா ரொம்ப புடிக்குமா?’ என்றான்
’என்னடா கேள்வி இது’ என்றேன்

சற்றே மௌனமாய் ’சமுக அந்தஸ்துதான் உறவையும் பாசத்தையும் நிர்ணயக்கிறது’ என்றான்..

’என்னடா என்ன ஆச்சு’ என்றபடி அவனைப் பார்த்தேன்
’விடுடான்னு’ அவன் வேறு எதை எதையோ பேசினான் அதற்கிடையில் எங்களுக்கான உணவைப் பரிமாறிச்சென்றார் பணியாளர்.

நான் மெதுவாக ’வீடு எங்கடா இருக்கு’ என்றேன்
’அவனோ இல்லை மச்சி தனியாத்தான்டா இருக்கேன்’ என்றான்
அப்பா அம்மா இங்க தானே இருக்காங்க அப்புறம் என்னடா என்று சொல்லியபடியே அவனைப்பார்த்தேன்..

என்னை அழமாய் பார்த்தான் சற்று நேர மௌனத்திற்கு பிறகு ’ஒரு கேயை( ஒரினச்சேர்க்கையாளர்) வீடும் சமுகமும் ஒத்துக்குமா” என்று சொல்லியபடி மச்சி அந்த சிக்கனை எடுத்து போடுடான்னு சொன்னான்.

அவ‌னிட‌ம் இந்த‌ வார்த்தையை நான் ச‌ற்றும் எதிர்பார்க்க‌வே இல்லை அப்ப‌டி சொல்வ‌தைவிட‌ அந்த‌ வார்த்தையை என்னால் ஜிர‌ணிக்க‌ முடிய‌வில்லை... அதற்கு பிறகு என்ன பேசுவது என்ற நினைப்பில் மௌனமானேன். அவன் என்னைப்பார்த்த்து சிரித்தபடியே இருந்தான் ..
பில்லை நான் தான் கொடுப்பேன் என்று பணத்தை செலுத்தினான்..உணவு விடுதியை விட்டு கிளம்பினோம். வெக்கை சூழ்ந்த அந்த வீதியில் வழக்கம் போல் அவன் பேசிக்கொண்டே வந்தான். நானோ வார்த்தைகளை தேடிக்கொண்டே இருந்தேன்..


இந்த கதை,உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

9 comments:

வினோத் said...

நல்லா இருக்கு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

therpoki said...

nalla irukku yarum thodatha visyamnu ninaikkiran

Athisha said...

புதுசா இருக்கு தல.. வாழ்த்துக்கள் வெற்றிபெற

Anonymous said...

’சமுக அந்தஸ்துதான் உறவையும் பாசத்தையும் நிர்ணயக்கிறது’ ///

நிதர்சனமான உண்மை சில கருத்துருக்களை நமது மனம் மவுனமாய் புறக்கணிக்கதான் செய்கிறது.. வித்தியாசமான முயற்சி வெற்றி வெற வாழ்த்துக்கள்

தொடர்பவன் said...

நன்றி வினோத் தேர்போகி அதிஷா மற்றும் அனானி

நேசமித்ரன் said...

அற்புதமான படைப்பு வெற்றி உமதே...
வாழ்த்துக்கள்

களந்தை பீர்முகம்மது said...

சமுக மனம் புறக்கணிக்கும் மனிதர்கள் நோக்கிய பார்வையுடனான இந்த கதை வித்தியாசமான முயற்சி. இன்னும் சற்றே வளர்த்திருக்கலாம். இருப்பினும் நடை நல்லா வந்திருக்கு..

Vidhoosh said...

'சமுக அந்தஸ்துதான் உறவையும் பாசத்தையும் நிர்ணயக்கிறது’ நல்ல வரிகள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். ;)

Post a Comment