Monday, June 1, 2009

கடக்கமுடியா பெருவெளி



என்னுள் தொலைந்துபோன‌
பாதையில் நீயும் நானும்
வண்ணத்துப்பூச்சியின் நிறங்களாய்

சாத்தப்படும் கதவுகளுக்கு அப்பால்
எப்போதும் மர்மப் புன்னகை ஒலியை
சலிக்காமல் உதிர்க்கிறாய்
நானோ கதவுகள் பொய்யென்று
மௌனமாய் கடக்கிறேன்

நீயோ புன்னகை ஒலியை
நிறங்களாய் மாற்றி கதவுகளை
அலங்கரிக்கிறாய்
நானோ நிறங்களும் பொய்யென்று
கதவுகளையும் கடக்கிறேன்

நீயோ நிற‌ங்க‌ளுக்கு வாச‌னை உண்டென
என‌து நாசித்துவார‌த்தை க‌ட‌க்கிறாய்
நானோ மூச்சும் பொய்யென்று
நிற‌ங்க‌ளை ம‌றுக்கிறேன்

இறுதியில் எதுவும் இல்லையென‌
நீயும் க‌ட‌க்கிறாய்
நானோ க‌ட‌த்த‌லே பொய்யென‌
அதையும் க‌ட‌க்கிறேன்

5 comments:

மயாதி said...

mmm....
simply superb

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதை நல்லா இருக்கு.. ஆனா பிழைகள் நிறைய இருக்கு .. (வேர்ட் வெரிஃபிகேசன் எடுத்துடுங்க ப்ளீஸ்)

தொடர்பவன் said...

தவறுகளை திருத்தி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி உங்களின் அழமான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் ..
நன்றி முத்துலெட்சுமி

தொடர்பவன் said...

நன்றி மயாதி

M.Rishan Shareef said...

நல்ல கவிதை !

Post a Comment