Wednesday, June 3, 2009

உயிப்பித்தலின் வாசனை


உவர்ப்பு சுவையை சுவாசித்த‌ படகின்
ஒவ்வொரு மரக்கட்டையும்
கிளைத்து வளர்ந்த அதன் வேர்களை களைய
துடுப்புடன் நித்தமிட்ட சண்டையில்
அது கலைந்த இலைகளின் பச்சைய வாசனையை
தன் மீதமரும் பறவைகளின் எச்சங்களில்
மீட்டு பரப்புகின்றன அவ்விடமெங்கும்

அலைகளிடம் பேசும் அதன்
நங்கூரமிட்ட கயிற்றின் கதைகளை
கேட்க மனமில்லமால்
தூரத்து கோயில் மணியோசையிடம்
அதன் ரகசியத்தை பகிர்தலில்
நேற்று துடித்தடங்கிய மீன்களின் உயிரோசையை
அலைகளிடம் விடைபெற்ற அதிகாலைப்பொழுதில்
கடைத்தெரு மீனவச்சியின்
வியர்வை வாசனையில் மிதக்க விடுகிறது

ரகசிய வார்த்தைகள் சூழ்ந்த
பின் மாலைப்பொழுது கால் தடங்களிடம்
உயிரற்ற மீன்களின் கண்களில்
படர்ந்த தன் பிம்பத்தின் ரகசியத்தை
சன்னமாய் பகிர்ந்து உயிப்பிக்கிறது
தனது நாட்களை

1 comments:

தேர்போகி said...

அருமைய்யான் வரிகள் ஓரு மயக்கம் தரும் வார்த்தைகள் அர்த்தம்தான் புரியல கொஞ்சம் விளக்க முடியுமா

Post a Comment