Friday, July 10, 2009

அவள் உதடுகள் விடாமல் துடிக்கிறது



குண்டென பரிசோதிக்கப்பட்ட
அவளின் மார்பகத்தில்
பால் சுரப்பை விடாது தேடுகிறது
முகம் சிதைந்த குழந்தை

அதன் வீறிடும் சபததில்
அவளின் கண்ணீர் உதிர்க்கும்
கதைகளை கதைக்க
அவள் உதடுகள் விடாமல் துடிக்கிறது

தன் உடலின் மேல் எழுதப்பட்ட
அத்தனை கதைகளையும்
தன்னுள் கதைத்து தொடர்ந்து ஓடுகிறாள்
காகம் கருகிக்கிடக்கும்
முட்கம்பிகள் வரை

முட்கம்பிகளின் தூரே தெரியும்
மஞ்சள் கறை படிந்த குளக்கரையை
நோக்கி அத்தனை ஆடைகளை
களைந்து அம்மணமாய் நிற்கிறாள்
அத்தனை அரசியலையும்
தன்னுள் சுமந்து

5 comments:

Anonymous said...

குண்டென பரிசோதிக்கப்பட்ட
அவளின் மார்பகத்தில்
பால் சுரப்பை விடாது தேடுகிறது
முகம் சிதைந்த குழந்தை///


தொடர்பவரே உங்கள் வரிகள் எங்கள் மனதில் ஆறாத வடுவை தொடரச்செய்கிறது

ஹேமா said...

தொடர்பவன் ,எம் பெண்களின் அம்மணத்தையும் அரசியலாக்கும் அரசியலை வரிகளால் சாடியிருக்கிறீர்கள்.நன்று.

ஆல் இன் ஆல் அழகுராஜா said...

அனைத்து அரசியலும் பெண் உடல் மீதே அதிகபட்ச வன்முறையை நிகழ்த்துகிறது...........

கூத்தன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்ல கவிதை

சாந்தி நேசக்கரம் said...

//முட்கம்பிகளின் தூரே தெரியும்
மஞ்சள் கறை படிந்த குளக்கரையை
நோக்கி அத்தனை ஆடைகளை
களைந்து அம்மணமாய் நிற்கிறாள்
அத்தனை அரசியலையும்
தன்னுள் சுமந்து //

இதற்கு மாற்றாய் எந்த வார்த்தையை சொல்லச் தோழனே ?

சாந்தி

Post a Comment