
பதில்களுக்கான கேள்விகள்
எழும் போது
எனக்கான அடையாளத்தை
கேள்விக்குள் பதுக்கி
தூக்கி எறிகிறேன்
அடையாளத்தின் ஆடைகளை
அம்மணமாய் பார்க்கும் போது
அவசரமாய் ஆடைகள் தேடி
அடையாளத்தை துறக்கிறேன்
இருளில் உலாவும்
ஆடைகளோ மோதித்தெறித்து
பெருங்குரலேடுத்து கத்துகின்றன
பதில்களே போதும் என
பதில்களோ மௌனச்சிரிப்புடன்
தனதாக்கிக் கொள்கிறது
எனக்கான ஆடைகளை
பதில்களோ மௌனச்சிரிப்புடன்
தனதாக்கிக் கொள்கிறது
எனக்கான ஆடைகளை
0 comments:
Post a Comment