Thursday, July 9, 2009

மலம் கழிக்கஇரவை நோக்கிகாத்திருந்தேன்




குவிக்கப்பட்ட பிணங்களின்
மத்தியில் பிரிக்கப்பட்டன
உனக்கான தேசமும் எனக்கான மானமும்

முட்கம்பிகளின் தூரே தெரியும்
ஒற்றைப்பனை நோக்கிய
எனது பயணத்தை நாள் தோறும்
ஒத்திகை பார்க்கிறேன்

அரசியல் தீர்வு என்று
அலரும் எனது வானொலி சப்தம்
துடித்தலரும் சிறுமியின் குரலில்
கதறி அணைந்தது

துர்நாற்றம் வீசும் வீதிகளில்
எனக்கான பேரத்தை யார் யாரோ
பேசுகையில் நான் மலம் கழிக்க

இரவை நோக்கி காத்திருந்தேன்

7 comments:

ஹேமா said...

தொடர்பவன்,மனதை கிண்டிக்கிளறி வதைக்கிறது நினைவுகள்.உங்கள் வரிகளும்கூட.

களந்தை பீர்முகம்மது said...

ஈன இனத்தில் பிறந்தது விட்டோம் கதறி அழக்கூட அனுமதி வாங்க வேண்டிய அற்ப சூழலில் அவமானங்களை அறித்தெரிவதெப்போது

ரவி said...

உருக்குகிறது...இயலாமையின் வேதனை...!!! ஹும்.....

சாத்தப்பன் said...

8 கோடி தமிழன் முன்னால் 100000 தமிழன் செத்தும் பல லட்சம் தமிழர்கள் வதை முகாமிலும் இருக்கும் கொடுமை இந்த இனத்தில் மட்டுமே நடக்கும் கொடுமை.....

சாத்தப்பன் said...

தொடர்பவன்,மனதை கிண்டிக்கிளறி வதைக்கிறது நினைவுகள்.உங்கள் வரிகளும்கூட

Anonymous said...

துர்நாற்றம் வீசும் வீதிகளில்
எனக்கான பேரத்தை யார் யாரோ
பேசுகையில் நான் மலம் கழிக்க

இரவை நோக்கி காத்திருந்தேன்///

மூஞ்சில அறையிற மாதிரியான வரிகள் தொடருங்கள்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment